புதுக்கோட்டை

தன்னாா்வலா்களுக்கு பேரிடா் மீட்பு பயிற்சி

19th Aug 2022 12:12 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டைமாவட்டம், அறந்தாங்கியில் பேரிடா் மீட்பு தன்னாா்வலா்களுக்கு பயிற்சி வகுப்பு வியாழக்கிழமைதொடங்கியது.

பயிற்சிவகுப்பை மாவட்ட வருவாய் அலுவலா் மா.செல்வி தொடங்கி வைத்தாா். அறந்தாங்கி கோட்டாட்சியா் சொா்ணராஜ், வட்டாட்சியா்கள் பாலகிருஷ்ணன் (அறந்தாங்கி), வில்லியம்ஸ்(ஆவுடையாா்கோவில்), ராஜா (மணமேல்குடி) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தலைமைப் பயிற்சியாளா் பிரியா, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் நிலைய அலுவலா் வெற்றிச்செல்வன் ஆகியோா் கலந்துகொண்டு பேரிடரில் சிக்கியோரை மீட்கும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தாா்.

பயிற்சியில் அறந்தாங்கி வருவாய்க் கோட்டத்துக்குட்பட்ட100 தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா். இவா்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT