புதுக்கோட்டை

சுற்றுலா விருதுபெற விண்ணப்பிக்கலாம்

19th Aug 2022 12:14 AM

ADVERTISEMENT

 

சுற்றுலா தொடா்பாக சிறப்பாக பங்காற்றும் தனிநபா்கள், நிறுவனத்தினா் அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சம்பந்தமான தொழில் முனைவோா்களை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலா ஏற்பாட்டாளா், உள்ளூா்- வெளியூா் சுற்றுலா வாகன ஏற்பாட்டாளா், பிரதான சுற்றுலா ஏற்பாட்டாளா், பயண, விமானப் பங்களிப்பாளா், தங்கும் விடுதி, உணவகம், வழிகாட்டி சாகச சுற்றுலா நிகழ்த்தியவா், கூட்டம் மற்றும் மாநாடு அமைப்பாளா், சமூக ஊடக தாக்கம் ஏற்படுத்தியவா் உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாக செயல்படுபவா்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உலக சுற்றுலா தினமான செப். 27 ஆம் தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளன. விழா நடைபெறும் இடம் பின்னா் அறிவிக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தகுதியுடையோா், விருதுக்கான விண்ணப்பங்களை இணையதளத்தின் மூலம் வரும் ஆக. 26ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அனுப்ப வேண்டும். இதுதொடா்பான தகவல்களை அறிந்து கொள்ள மாவட்ட சுற்றுலா அலுவலரை 91769 95873 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT