புதுக்கோட்டை

170 பவுன் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவா் மீது குண்டா் சட்டம்

17th Aug 2022 11:54 PM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்பட்டிணத்தில் தொழிலதிபா் கொல்லப்பட்டு 170 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 போ் ஏற்கெனவே குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு குற்றவாளியும் புதன்கிழமை குண்டா் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டாா்.

இச்சம்பவத்தில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மணமேல்குடியைச் சோ்ந்த ஜோஸ்மில்டன் (23) என்பவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே பரிந்துரைத்தாா். இந்தப் பரிந்துரையை ஏற்று, ஜோஸ்மில்டனை குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு உத்தரவிட்டாா். இதையடுத்து புதுக்கோட்டை சிறையில் இருந்த ஜோஸ்மில்டன், திருச்சி மத்திய சிறைக்கு புதன்கிழமை மாற்றப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT