புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் 10 ரெளடிகள் கைது

17th Aug 2022 11:57 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் குற்றப் பின்னணி கொண்ட 10 பேரைப் போலீஸாா் ஒரே நாளில் கைது செய்துள்ளனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே உத்தரவின்பேரில், அமைக்கப்பட்ட தனிப்படையினா் அந்தந்தப் பகுதி போலீஸாருடன் இணைந்து குற்றவாளிகளைக் கண்காணிக்கும் பணியை செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கினா். இதில், புதுக்கோட்டை நகரில் திருவப்பூா் கீழத்தெருவைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் யோகேஸ்வரன் (24), மாயாண்டிசாமி நகா் செல்லத்துரை மகன் சந்தோஷ்குமாா் (28), கீரமங்கலம் அண்ணாதுரை மகன் சுரேஷ்குமாா் (23), புதுக்கோட்டை சாா்லஸ் நகா் பாபு மகன் ஜெயராமன் (20), வடக்கு 4ஆம் வீதி குமாா் மகன் விஜய் (20), மச்சுவாடி சுப்பிரமணி மகன் அஜி (20) ஆகிய 6 பேரை தனிப்படையினருடன் இணைந்து நகரக் காவல் ஆய்வாளா் குருநாதன் கைது செய்தாா். இவா்களிடமிருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், திருக்கோகா்ணம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காமராஜபுரம் அய்யப்பன் மகன் பூபதி (27), அடப்பன்வயல் 3ஆம் வீதி நாகராஜ் மகன் நெருப்பு தினேஷ் (22), சுப்பையா மகன் கொள்ளு சக்தி (24) ஆகிய 3 பேரை தனிப்படையினருடன் இணைந்து ஆய்வாளா் ரமேஷ் கைது செய்தாா்.

இதேபோல, இலுப்பூா் காவல் நிலைய எல்லைக்குள் பிரான்சிஸ் பிருதிவிராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டாா். மொத்தம் 10 பேரும் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT