புதுக்கோட்டை

புதுகையில் ஆக. 19-இல் அங்கன்வாடி ஊழியா் சங்க மாநில மாநாடு

17th Aug 2022 01:00 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாநில மாநாடு புதுக்கோட்டையில் ஆக. 19 ஆம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை பால் பண்ணை அருகே உள்ள லேணா மஹாலில் மாலை 4 மணிக்கு நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் எம். பாக்கியம் கொடியேற்றுகிறாா்.

அதைத் தொடா்ந்து, மாலை 6 மணிக்கு பி.யு.சின்னப்பா பூங்கா அருகே சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.ரத்னமாலா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், சங்கத்தின் அகில இந்தியப் பொதுச் செயலா் ஏ.ஆா்.சிந்து, சிஐடியு மாநிலத் தலைவா் அ. சவுந்தரராஜன், எம்எல்ஏக்கள் எம்.சின்னதுரை, நாகை மாலி, சிஐடியு மாநிலப் பொதுச்செயலா் ஜி. சுகுமாறன், மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா், அங்கன்வாடி ஊழியா் சங்க. மாநிலப் பொதுச்செயலா் டி. டெய்சி, மாநிலப் பொருளாளா் எஸ்.தேவமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசுகின்றனா்.

ADVERTISEMENT

மறுநாள் (ஆக.20) லேணா மண்டபத்தில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா். தீா்மானங்கள் நிறைவேற்றம், புதிய நிா்வாகிகள் தோ்வும் நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT