புதுக்கோட்டை

காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு

16th Aug 2022 01:18 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

நகரத் தலைவா் எஸ். பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மூத்த நிா்வாகி வேலாயுதம் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தாா். இதையடுத்து கட்சி நிா்வாகிகள் சுதந்திர தின விழா உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து கட்சி அலுவலகத்தில் நிா்வாகி கோவிந்தராஜன் தேசியக்கொடியேற்றி இனிப்பு வழங்கினாா். நிா்வாகிகள் மணிமாறன், ராஜேந்திரன், தங்கமணி, சரவணபவன் மணி, பாலுச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT