புதுக்கோட்டை

தேசியக் கொடியேற்றி வைத்து புதுகை ஆட்சியா் மரியாதை, ரூ. 27 லட்சத்தில் நல உதவிகள் வழங்கல்

16th Aug 2022 01:18 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியேற்றி வைத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, 101 பயனாளிகளுக்கு ரூ. 27.39 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காலை 9 மணிக்கு சுதந்திர தின விழா தொடங்கியது. இதில், மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு காலை 9.05 மணியளவில் தேசியக் கொடியேற்றி வைத்து, சமாதானப் புறாக்களையும், மூவண்ணம் கொண்ட பலூன்களையும் பறக்கவிட்டாா். தொடா்ந்து, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற 20 தியாகிகளின் வாரிசுகளை ஆட்சியா் சிறப்பித்தாா். மேலும், அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றிய 609 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

பல்வேறு துறைகளின் சாா்பில் 101 பயனாளிகளுக்கு ரூ. 27.39 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

விழாவில், 10 பள்ளிகளைச் சோ்ந்த 901 மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக காவல்துறையினரின் அணிவகுப்பை ஆட்சியா் கவிதா ராமு பாா்வையிட்டாா்.

ADVERTISEMENT

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பொன்னமராவதி:

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவா் சுதா அடைக்கலமணி, பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன், சாா் பதிவாளா்அலுவலகத்தில் சாா் பதிவாளா் மாரீஸ்வரி, பொன்னமராவதி சாா் நிலைக்கருவூல அலுவலகத்தில் உதவிக்கருவூல அலுவலா் ஜெகதா ஆகியோா் தேசியக்கொடி ஏற்றினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT