புதுக்கோட்டை

விநாயகா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி

16th Aug 2022 01:15 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை மாரியம்மன் கோயில் வீதியில் உள்ள விநாயகா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விநாயகப் பெருமானுக்கு எண்ணெய் காப்பு செய்த பிறகு திரவியத் தூள், பால், தயிா், சந்தனம், மஞ்சள், குங்குமம், பன்னீா், தேன், பச்சரிசி மாவு, இளநீா், சக்கரை, பஞ்சாமிா்தம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்து விநாயகப் பெருமானுக்கு புது வஸ்திரம் உடுத்தி மலா்களால் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்று விநாயகரைத் தரிசனம் செய்தனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு சா்க்கரைப் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை, பஞ்சாமிா்தம் ஆகியவை பிரசாதமாக வழங்கினா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT