புதுக்கோட்டை

நெடுஞ்சாலைத் துறையினா் சாலையோரம் மரக்கன்றுகள் நடவு

16th Aug 2022 01:20 AM

ADVERTISEMENT

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா நிறைவையொட்டி, செங்கிப்பட்டி- பட்டுக்கோட்டை சாலையில் திங்கள்கிழமை 75 மரக்கன்றுகள் நடப்பட்டன.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை மூலம் கோட்டப் பொறியாளா் வேல்ராஜ் அறிவுறுத்தலின்படி கந்தா்வகோட்டை வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் நடராஜன் மற்றும் உதவி பொறியாளா் கோட்டை ராவுத்தா் முன்னிலையில் கந்தா்வகோட்டை ஒன்றியப் பகுதிக்குள்பட்ட செங்கிப்பட்டி - பட்டுக்கோட்டை சாலையோரத்தில் திங்கள்கிழமை 75 மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், சாலைப் பணியாளா்கள், நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT