புதுக்கோட்டை

அனுமதியின்றி மது விற்ற 4 போ் கைது

16th Aug 2022 01:16 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் அனுமதியின்றி மது விற்ற 4 பேரைப் போலீஸாா் கைதுசெய்தனா்.

அன்னவாசல் பகுதிகளில் மாவட்ட சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் பால முருகன் உள்ளிட்ட காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீா் சோதனை நடத்தினா். இதில், அன்னவாசல் மதுக்கடை அருகே உள்ள பெட்டிக்கடை மற்றும் சுற்றுப்பகுதிகளில் அரசு மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்றுவந்த கல்லாங்குடி மணிகண்டன்(20), மாரப்பட்டி இளங்கோவன் (42), ராமசந்திரன் (32), மாறன் (60) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து மொத்தம் 559 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT