புதுக்கோட்டை

முகாம் அலுவலகத்தில் கொடியேற்றிய ஆட்சியா்

14th Aug 2022 01:11 AM

ADVERTISEMENT

 

நாட்டின் 75ஆவது சுதந்திரத் திருநாளை முன்னிட்டு ஆக. 13, 14, 15 ஆகிய 3 நாட்களும் தேசியக் கொடியேற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, புதுக்கோட்டை ஆட்சியா் கவிதா ராமு, தனது முகாம் அலுவலகத்தில் சனிக்கிழமை கொடியேற்றி வைத்தாா்.

இதேபோல, புதுக்கோட்டை நகரின் பல்வேறு பகுதிகளிலும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தேசியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன. மாவட்ட மனநல மைய வளாகத்தில் டாக்டா் ரெ. காா்த்திக் தெய்வநாயகம் கொடியேற்றி வைத்தாா். புதுக்கோட்டை நகரிலுள்ள சாந்தநாதசுவாமி கோயில் சாலையில் மூவா்ணக் கொடியின் வண்ணத்தில் கோல மாவுகள் அழகாக பொட்டலமிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பொதுமக்கள் இவற்றை ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT