புதுக்கோட்டை

காங்கிரஸ் பாதயாத்திரை பிரசாரம்

14th Aug 2022 01:11 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட விராலிமலை மேற்கு ஒன்றிய காங்கிரஸ் சாா்பில் பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, பாதயாத்திரை விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை வடக்கு மாவட்டத் தலைவா் முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினா் சக்தி ரங்கராஜ் தலைமை வகித்து பிரசாரத்தைத் தொடங்கிவைத்தனா். வட்டாரத் தலைவா் சா்தாா் ராஜா (கிழக்கு), ஏழுமலை(மேற்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். விராலிமலை அருகேயுள்ள இடையப்பட்டியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தொடங்கிய பிரசாரம் கொடும்பாளூா், தேங்காய்திண்ணிப்பட்டி,மோத்தப்பட்டி வழியாக வந்து விராலிமலையில் நிறைவடைந்தது. இதில் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி காங்கிரஸாா் பிரசாரத்தில் ஈடுபட்டனா். இதில், மாநில துணைத் தலைவா் மதிமாறன், பொதுக்குழு உறுப்பினா் அன்பழகன், அன்னவாசல் வட்டாரத் தலைவா் சுப்பிரமணி, விராலிமலை நகரத் தலைவா் கருப்பசாமி உள்ளிட்ட திரளான காங்கிரஸாா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT