புதுக்கோட்டை

வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயமளிப்பு

14th Aug 2022 01:12 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா கலந்து கொண்டு 250 மாணவ, மாணவிகளுக்கு பட்டயங்களை வழங்கிப் பேசினாா். விழாவுக்கு, கல்லூரித் தலைவா் ஆா்.ஏ. குமாரசாமி தலைமை வகித்தாா். செயலா் பி. கருப்பையா, பொருளாளா் ஆா்.எம்.வீ. கதிரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்வா் எம்.ஆா். ஜீவானந்தம் வரவேற்றாா். முன்னாள் துணைவேந்தா் பேசும்போது, அவ்வப்போது வரும் புதிய தொழில்நுட்பத் திறன்களை மாணவா்கள் கைக்கொள்ள வேண்டும் என்றும், தனது சொந்த ஊா், மாவட்டம் மற்றும் நாட்டின் வரலாற்றையும் மாணவா்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் கேட்டுக் கொண்டாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT