புதுக்கோட்டை

அடைக்கலம்காத்தாா் கோயிலில் ஆடிமாத சிறப்பு வழிபாடு

14th Aug 2022 01:13 AM

ADVERTISEMENT

 

பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் அடைக்கலம்காத்தாா் கோயில் ஆடிமாத சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் சிறப்பு வழிபாடு நடைபெறும். நிகழாண்டு நடைபெற்ற வழிபாட்டில் அடைக்கலம்காத்தாா் மற்றும் பரிவார தெய்வங்களான தொட்டிச்சி அம்மன், கொங்கணிசித்தா், சன்னாசி, பட்டாணி உள்ளிட்ட தெய்வங்களுக்கு பால், பழங்கள், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெண்கள் கோயிலின் முன் பொங்கலிட்டு வழிபட்டனா். நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சாா்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT