புதுக்கோட்டை

தீரா் சத்தியமூா்த்தி நினைவு இல்லத்தில் உறுதியேற்பு

13th Aug 2022 12:58 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலுள்ள விடுதலைப் போராட்டத் தியாகி தீரா் சத்தியமூா்த்தி நினைவு இல்லத்தில் நேரு யுவ கேந்திரா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மற்றும் ஜெஜெ கல்லூரி இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் மாலை அணிவிப்பு, உறுதிமொழியேற்பு மற்றும் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருமயம் ஊராட்சித் தலைவா் சிக்கந்தா் தலைமை வகித்தாா். தீரா் சத்தியமூா்த்தியின் சிலைக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட இளையோா் அலுவலா் ஜோயல் பிரபாகா் தொடங்கி வைத்தாா். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்தப் பேரணி, திருமயம் கோட்டை வழியாக சத்தியமூா்த்தி இல்லத்தில் நிறைவடைந்தது.

நேரு யுவகேந்திரா உதவித் திட்ட அலுவலா் நமச்சிவாயம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சங்கா், குமரன், இளையோா் செஞ்சிலுவைச் சங்கத் திட்ட அலுவலா்கள் தயாநிதி, கோவிந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT