புதுக்கோட்டை

போதைக்கு எதிரான உறுதிமொழியேற்பு

13th Aug 2022 12:57 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) து. தங்கவேல், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிச்சாமி, மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ரெ. மதியழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போதைப் பழக்கத்தை ஒழிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்பேன் என்பது உள்ளிட்ட உறுதிமொழிகள் வாசிக்கப்பட்டு ஏற்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT