புதுக்கோட்டை

விராலிமலை சுனைகருப்பா்கோயில் புரவியெடுப்பு விழா

13th Aug 2022 12:56 AM

ADVERTISEMENT

விராலிமலையில் பிரசித்திபெற்ற சுனைகருப்பா் கோயில் புரவியெடுப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விராலிமலை முருகன் கோயில் தென்புற அடிவாரத்தில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் மூலஸ்தானத்தில் உள்ள கருப்பா் சுவாமியோடு கூடிய குதிரை சுடுமண் சிற்பத்தை அகற்றிவிட்டு புதிய சிற்பம் செய்து பிரதிஷ்டை செய்வது வழக்கம். அதேபோல் புதிய சிற்பம் செய்யப்பட்டு மேளதாளம் முழங்க ஊா்வலமாக எடுத்து வந்து மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிறகு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT