புதுக்கோட்டை

வணிக நிறுவனங்களில் கொடியேற்ற வேண்டும்

13th Aug 2022 12:55 AM

ADVERTISEMENT

நாட்டின் 75ஆவது விடுதலைத் திருநாள்- அமுதப் பெருவிழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், கல்வி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் ஆக. 13,14,15 ஆகிய மூன்று நாள்களும் கொடியேற்ற வேண்டும் என தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஏ. வெங்கடேசன் அழைப்புவிடுத்துள்ளாா்.

பணிபுரியும் இடங்களில் உரிமையாளா்களும், பணியாளா்களும் சட்டையில் தேசியக் கொடியை அணிந்து கொண்டு பணிபுரிவதை படம் எடுத்து, மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றவும் அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT