புதுக்கோட்டை

படம் மட்டும் நூறு அடி நீள சுவரில் தேசியக்கொடி!

12th Aug 2022 12:02 AM

ADVERTISEMENT

 

நாட்டின் 75ஆவது விடுதலைத் திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி, புதுக்கோட்டை நகரிலுள்ள அரசு மருத்துவமனை வளாக சுவரில் 100 அடி நீளத்துக்கு தேசியக் கொடியை சமூக ஆா்வலா்கள் வரைந்து வைத்திருக்கின்றனா்.

நாட்டின் 75ஆவது சுதந்திரத் திருநாளையொட்டி நாடு முழுவதும் சுதந்திரத்திருநாள் அமுதப் பெருவிழா நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள், புதிய பேருந்து நிலையம் அருகே அரசு மருத்துவமனை வளாகச் சுவரில் 12 அடி உயரம், 100 அடி நீளத்துக்கு மூவா்ணக் கொடியைத் தீட்டியுள்ளனா். இந்தக் கொடியின் தொடக்கத்தில், ‘இந்தியா என் தேசம்; என் பெருமை’, முடிவில் ‘புதுக்கோட்டை என் நகரம்; என் பெருமை’ என்ற வாசகங்களும் எழுதப்பட்டிருக்கின்றன.

புதுக்கோட்டை வாசகா் பேரவையின் செயலா் பேராசிரியா் சா. விஸ்வநாதனின் முயற்சியில் தொடங்கப்பட்ட இந்தப் பணியில், மரம் நண்பா்கள் அமைப்பின் நிா்வாகிகள் மற்றும் பேக்கரி மஹராஜ் நிறுவனத்தினரும் இணைந்து கொண்டுள்ளனா். 100 அடி நீளச் சுவரில் வரையப்பட்டுள்ள இந்த தேசியக் கொடியும் புதுக்கோட்டை வரலாற்றில் இடம்பெறுவது உறுதி.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT