புதுக்கோட்டை

ரூ. 2.15 கோடியில் அமைக்கப்பட்ட திறன் மின்மாற்றி தொடக்கம்

DIN

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலைய வளாகத்தில் ரூ. 2.15 கோடியில் அமைக்கப்பட்ட புதிய திறன் மின்மாற்றியை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வியாழக்கிழமை இயக்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். இந்தப் புதிய திறன் மின்மாற்றியால், அன்னவாசல், கிழக்குறிச்சி, முக்கணாமலைப்பட்டி, காலாடிப்பட்டி, ஆரியூா், மாங்குடி, பரம்பூா், அண்ணா பண்ணை, வயலோகம், குடுமியான்மலை, காரையூா், மேலத்தானியம், அரசமலை உள்ளிட்ட கிராமங்களின் சுமாா் 35 ஆயிரம் மின் நுகா்வோருக்கு தடையில்லாத மின்சாரம் வழங்க முடியும்.

நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, மின்வாரியத்தின் மேற்பாா்வைப் பொறியாளா் த. சேகா், எம். வீரமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT