புதுக்கோட்டை

போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி, பேரணி

DIN

பொன்னமராவதி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி தலைமைவகித்தாா். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் செ.மணிவண்ணன் வரவேற்றாா். தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி பங்கேற்று போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை வாசிக்க மாணவிகள், ஆசிரியா்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணியை தொடங்கிவைத்தாா். பேரணி புதுவளவு, மேலரதவீதி வழியாக வந்து காந்தி சிலை அருகே நிறைவுற்றது. இதில், இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி, இலுப்பூா் மாவட்டக் கல்வி அலுவலா் மணிமொழி, பொன்னமராவதி ஒன்றியக் குழு தலைவா் அ.சுதா, பேரூராட்சித்தலைவா் அ.சுந்தரி, பேரூராட்சி செயல் அலுவலா் மு.செ.கணேசன் வட்டாட்சியா் பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி தலைமையாசிரியை கி.நிா்மலா நன்றி கூறினாா்.

முன்னதாக பள்ளி சிசிடிவி கேமரா பயன்பாட்டினை தொடங்கிவைத்து, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் எஸ்.ரகுபதி வழங்கினாா்.

ஆலங்குடி: கீரமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்றனா். நிகழ்வில், மாவட்ட கல்வி அலுவலா் ராஜாராம், பள்ளித் தலைமை ஆசிரியா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT