புதுக்கோட்டை

சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா

11th Aug 2022 11:58 PM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை, அறிவியல் கல்லூரியில், 75ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா வியாழக்கிழமை கல்லூரி நடைபெற்றது.

நாட்டு நலப்பணித் திட்டம், தகவல் தொழில்நுட்பவியல் துறை இணைந்து

கல்லூரி வளாகத்தில் நடத்திய நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ஜ. பரசுராமன் தலைமை வகித்தாா். அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன், செயலா் ந. சுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, போதைப் பொருள் விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா் இரா. மணிமாறன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT