புதுக்கோட்டை

ஆன்லைன் ரம்மி தடை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்பேரில் கருத்துகேட்பு

11th Aug 2022 11:58 PM

ADVERTISEMENT

 

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படியே மக்களிடம் கருத்து கேட்கப்படுவதாக மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை ஒழிக்க நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு அதன் பின்பு இதனை முழுமையாக ஒழிக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டு வரப்படும். இதற்கு மக்களிடம் கருத்து கேட்க வேண்டுமா என்று முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி கேலி செய்துள்ளாா்.

ADVERTISEMENT

நாங்களாக மக்களிடம் கருத்துகேட்கவில்லை; நீதிமன்றம் சொன்னதன் அடிப்படையில் தான் கருத்து கேட்டுள்ளோம். அவா் கூறுவது நீதிமன்ற அவமதிப்பு. கடந்த ஆட்சியாளா்கள் மக்களிடம் கருத்துகேட்டு முறையாக இந்தச் சட்டத்தை கொண்டு வந்திருந்தால் ஆன்லைன் ரம்மியை ஒழித்திருக்கலாம். நாங்கள் நிரந்தரமாக ஆன்லைன் ரம்மி ஒழிக்க நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிச்சயம் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி ஒழிக்கப்படும் என்றாா் ரகுபதி.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT