புதுக்கோட்டை

14 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பாண்டிய மன்னா் கால கற்கோயில் கண்டெடுப்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே உள்ள ரெகுநாதபுரம் வனப்பகுதியில் கி.பி. 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த, பிற்கால பாண்டிய மன்னா் கால கற்றளி (கற்கோயில்) சேதமடைந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், பல கலைநயமிக்க சிற்பங்கள் கேட்பாரற்று அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கிறது.

கீரனூா் அருகே உள்ள ரெகுநாதபுரம் வனப்பகுதியில் பேராசிரியா் முத்தழகன் தலைமையில், கீரனூா் முருகபிரசாத், நாராயணமூா்த்தி, ராகுல் பிரசாத் ஆகியோா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா். இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியது: இந்த ஆய்வில் வனப்பகுதியில் பிற்கால பாண்டிய மன்னா்களின் இடிந்த நிலை கற்றளி அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் கலைநயம் மிக்க சிற்பங்கள், வேலைப்பாடு மிக்க தூண்கள், கல்வெட்டுகளுடன் கூடிய கற்கள் அப்பகுதி முழுவதும் சிதறிக் கிடக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்னா், இந்த கிராமத்தில் இருந்து பல்வேறு சிற்பங்களை அரசு அதிகாரிகள் எனக் கூறி எடுத்துச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். ஆனால், அந்தச் சிற்பங்கள் குறித்த தகவல் தற்போது வரை இல்லை என்றும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனா். சில மாதங்களுக்கு முன்னா், இந்தப் பகுதியில் ஆசிரியம் கல்வெட்டுகள், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வட்டங்கள், இரும்பு உருக்கு உலைகள், பல்லவா் கால அய்யனாா் சிற்பம் எனத் தொடா்ந்து செய்திகள் வந்தாலும், அவையாவும் இதுவரை தொல்லியல் துறை பாதுகாப்பில் கொண்டுவரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள இந்த கற்றளியை தொல்லியல் துறை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால், கிரானைட் கற்களால் ஆன வேலைப்பாடு மிக்க பழங்கால எச்சங்கள் பாதுகாக்கப்படும். மேலும், கலைநயமிக்க சிற்பங்களை தொல்லியல் துறை உடனடியாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொல்லியல் ஆய்வாளா்கள், பொது மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

பேராயரிடம் அதிமுக வேட்பாளா் ஆசி

தருமபுரம் ஆதீனத்திடம் மதிமுக வேட்பாளா் ஆசி

SCROLL FOR NEXT