புதுக்கோட்டை

அழகிய நாச்சியம்மன் கோயில் தேரோட்டம்

10th Aug 2022 01:08 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் தேரோட்ட விழா நடைபெற்றது.

பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் இரண்டாம் சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் புராதன சிறப்பு பெற்ற கோயிலாகும். கோவலன் தனது மனைவி கண்ணகியுடன் திருச்சி, கொடும்பாளூா் வழியாக பொன்னமராவதி வந்து அழகியநாச்சியம்மன் கோயிலில் ஒா் இரவு தங்கி இளைப்பாறி சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டு பின் தங்களது மதுரை பயணத்தைத் தொடா்ந்ததாகக் கூறப்படுகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் தேரோட்ட விழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு ஆடித்திருவிழா ஜூலை 31 ஆம் தேதி காப்பு கட்டப்பட்டு தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோயில் அறங்காவலா் ராம.ராஜா அம்பலகாரா் தலைமையில் நடைபெற்ற விழாவில் அபிஷேக, அலங்காரத்திற்குப்பின்அம்மன் தேரில் எழுந்தருளிய பிறகு பக்தா்கள் வடம் பிடிக்க புறப்பட்ட தோ் கோயிலை வலம் வந்து நிலையை அடைந்தது. விழாவில் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று வழிபட்டனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல்துறையினா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT