புதுக்கோட்டை

ஆலவயல் ஆரம்பப் பள்ளியில் மேம்படுத்தப்பட்ட வகுப்பறை திறப்பு

10th Aug 2022 07:30 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் பொதுமக்கள் பங்களிப்புடன் மேம்படுத்தப்பட்ட வகுப்பறை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு ஊா் முக்கியஸ்தா் பெரி. அழகப்பன் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத்தலைவா் உதயம் ராஜா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் சரஸ்வதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், பொதுமக்கள் மற்றும் பெற்றோா் பங்களிப்புடன் ரூ 3.50 லட்சம் மதிப்பில் குளிரூட்டப்பட்ட வகுப்பறை, எல்இடி தொலைக்காட்சிப்பெட்டி , இருக்கைகள், கண்கவரும் ஓவியங்கள் உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட வகுப்பறையை சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி திறந்துவைத்தாா்.

விழாவில், ஒன்றியக்குழு தலைவா் சுதா அடைக்கலமணி, துணைத்தலைவா் அ.தனலெட்சுமி, ஊராட்சித்தலைவா் சந்திரா சக்திவேல், வட்டாட்சியா் பிரகாஷ், வட்டாரக்கல்வி அலுவலா் சே.ராமதிலகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி தலைமையாசிரியா் பிரபாகரன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT