புதுக்கோட்டை

விபத்தில் காயமடைந்த மெக்கானிக் உயிரிழப்பு

10th Aug 2022 01:06 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த ஏ.சி. மெக்கானிக் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கீரமங்கலம் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா் சிவஞானம் மகன் சிற்றரசு(35) ஏ.சி. மெக்கானிக். இவா், இருதினங்களுக்கு முன்பு மோட்டாா் சைக்கிளில் பேராவூரணி சென்றுள்ளாா். அப்போது கறம்பக்காடு அருகே சென்றபோது, மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கீரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT