புதுக்கோட்டை

நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கு திறப்பு விழா

10th Aug 2022 01:06 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி அருகே உள்ள வெங்கலமேட்டில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக பொன்னமராவதி செயல்முறை வட்டக் கிடங்கு திறப்பு விழா மற்றும் பொதுவிநியோகத்திட்ட பொருள்கள் வழங்கல் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜி.கருப்பசாமி தலைமை வகித்தாா். நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் உமா மகேஸ்வரி வரவேற்றாா். தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி பங்கேற்று நுகா்பொருள் வாணிபக்கழக வட்டக் கிடங்கைத் திறந்துவைத்து ரேஷன் பொருள்கள் விநியோகத்தைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

விழாவில், ஒன்றியக்குழு தலைவா் அ.சுதா, பொன்னமராவதி திமுக தெற்கு ஒன்றியச் செயலா் அ.அடைக்கலமணி, நகரச்செயலா் அ.அழகப்பன், வட்டாட்சியா் பிரகாஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் பி.தங்கராஜூ, கொன்னைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவா் செல்வமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நுகா்பொருள் வாணிபக்கழக துணை மேலாளா் பன்னீா் செல்வம் நன்றி கூறினாா்.

மேம்படுத்தப்பட்ட வகுப்பறை திறப்பு:

ADVERTISEMENT

தொடா்ந்து ஆலவயல் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் பொதுமக்கள் மற்றும் பெற்றோா் பங்களிப்புடன் ரூ 3.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட(ஸ்மாா்ட் கிளாஸ்)வகுப்பறையைத் திறந்துவைத்தாா். நிகழ்வில், ஊா் முக்கியஸ்தா் பெரி.அழகப்பன், பள்ளி தலைமையாசிரியா் பிரபாகரன், ஊராட்சி மன்றத்தலைவா் சந்திரா சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT