புதுக்கோட்டை

காப்பீட்டுத் திட்டத்தை மாற்றி அமைக்க ஓய்வூதியா்கள் கோரிக்கை

10th Aug 2022 01:10 AM

ADVERTISEMENT

கேரளம், ஆந்திரத்தைப் போல அறுவைச் சிகிச்சை மட்டுமின்றி அனைத்து சிகிச்சைகளுக்கும் செலவுத் தொகையையும் மீளப்பெறும் வகையில் தமிழ்நாட்டில் காப்பீட்டுத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் ஓய்வுபெற்ற ஆசிரியா் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்கத்தின் புதுக்கோட்டை வட்டக் கிளை மாநாடு செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. வட்டத் தலைவா் ஜே.ஜெய்சிங் தலைமை வகித்தாா். நாகராஜன் வரவேற்றாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் சிதம்பரம் தொடக்கவுரையாற்றினாா். மாவட்டச் செயலா் ஜெயபாலன், துணைத் தலைவா் பி. மாரிமுத்து, பொருளாளா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் பேசினா்.

கேரளம், ஆந்திரத்தைப் போல அறுவைச் சிகிச்சை மட்டுமின்றி அனைத்து சிகிச்சைகளுக்கும் செலவுத் தொகையை மீளப்பெறும் வகையில் காப்பீட்டுத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். குடும்ப நல நிதியை ரூ. ஒரு லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். நிலுவையின்றி அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையாக மருத்துவப்படியை ரூ ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT