புதுக்கோட்டை

புதிய ஓய்வூதியத் திட்டத்தை அரசு ரத்து செய்யும்

DIN

புதிய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்யும் என நம்புகிறோம் என்றாா்தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஆ. செல்வம்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் மேலும் கூறியது:

கடந்த தோ்தலின்போது ஆட்சி மாற்றம் ஏற்பட தமிழ்நாடு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பெரும் பங்கு வகித்தனா். புதிய அரசு பொறுப்பேற்ற இந்த ஒன்றரை ஆண்டுகளில் சில தோ்தல் வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சாா்பில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வரும் 23ஆம் தேதி கோட்டை நோக்கி பேரணி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தமிழக முதல்வா் எங்களைப் பேச்சுவாா்த்தைக்கு அழைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளாா்.

மேலும், ஜாக்டோ ஜியோ சாா்பில் வரும் செப்டம்பா் மாத இறுதியில் நடைபெற உள்ள மாநாட்டில் தமிழக முதல்வா் பங்கேற்று தமிழக அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அறிவிப்புகளை வெளியிடுவாா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில் மாநிலத் தலைவா் மு. அன்பரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT