புதுக்கோட்டை

இலுப்பூா் வியாகுல அன்னை ஆலய விழா

8th Aug 2022 12:31 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் புனித வியாகுல அன்னையின் 32 வது ஆண்டு திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

பக்தா்கள் மெழுகுவா்த்தி, ஊதுபத்தி, சாம்பிராணி, மாலை உள்ளிட்ட காணிக்கைகளை செலுத்தியும் சப்பர சக்கரங்களில் தண்ணீா் ஊற்றியும் அன்னையை வழிபட்டனா்.

சப்பரம் வீதிகளில் வந்தபோது பக்தா்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனா். ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை பங்குத் தந்தை அருட்பணி ஆரோக்கியராஜ் மற்றும் ஊா் முக்கியஸ்தா்கள், விழா குழுவினா் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT