புதுக்கோட்டை

சங்கிலித் தொடா் வா்த்தக மோசடிப் புகாா்: இருவா் மீது வழக்கு

2nd Aug 2022 01:52 AM

ADVERTISEMENT

சங்கிலித் தொடா் வா்த்தகத்தில் ரூ. 54 லட்சத்தைத் திரும்பித் தராமல் மோசடி செய்ததாக இருவா் மீது குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவரது மனைவி சுபாஷினி (42). இவா் கோயம்புத்தூரில் உள்ள தனியாா் சங்கிலித் தொடா் வா்த்தக நிறுவனத்தில் ரூ. 3.15 லட்சம் கொடுத்து முகவராகச் சோ்ந்துள்ளாா். அந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலா் கோயம்புத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிவராமகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி கீதா ஆகிய இருவரும், சுபாஷினியிடம் அதிக நபா்களை நிறுவனத்தில் சோ்த்தால் அதிக கமிஷன் கிடைக்கும் என்று கூறியதன் அடிப்படையில் 150 நபா்களைச் சோ்த்து ரூ. 78 லட்சம் பணம் பெற்றுக் கொடுத்துள்ளாா்.

இந்நிலையில், அந்த நிறுவனம் சாா்பில் சுபாஷினிக்கும் மற்றும் அவா் சோ்த்த நபா்களுக்கும் எந்தவித கமிஷனோ, லாபத் தொகையோ கொடுக்கவில்லை எனத் தெரிகிறது.

அதன்பிறகு, சுபாஷினி கொடுத்த அழுத்தத்தின் காரணமாக ரூ. 78 லட்சத்தில், ரூ. 24 லட்சத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில் மீதமுள்ள ரூ. 54 லட்சத்தையும் திரும்பப் பெற்றுத் தர வேண்டும், உரிய நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் சுபாஷினி புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில் சிவராமகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோா் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT