புதுக்கோட்டை

அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிராக்டா் பறிமுதல்

2nd Aug 2022 01:50 AM

ADVERTISEMENT

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு, மழையூா் பகுதியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டா், மாட்டு வண்டியைப் போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள புள்ளான்விடுதி பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, வடகாடு போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, மழையூா் அருகேயுள்ள அய்யங்காடு அக்னி ஆற்று பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டியை மழையூா் போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT