புதுக்கோட்டை

வேளாண் கல்லூரியில் தீத்தடுப்பு ஒத்திகை

30th Apr 2022 12:15 AM

ADVERTISEMENT

இலுப்பூா் வட்டம், குடுமியான்மலை வேளாண்மை கல்லூரியில் தீயினால் ஏற்படும் விளைவு மற்றும் அதிலிருந்து பாதுகாக்க பயன்படுத்தப்படும் வழிமுறைகள் பற்றிய செயல்முறை விளக்கம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட தீத்தடுப்புக் குழு சாா்பில் நிலை அலுவலா் செல்வராஜ் தலைமை வகித்து நிகழ்ச்சியை நடத்தினாா்.

இதில் முன்னணி தீயணைப்பாளா் ஜான், ராஜசேகா், கல்லூரி முதல்வா் செங்குட்டுவன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தீயிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகளை வழங்கிய பிறகு அதற்கான செயல்முறைகளும் செய்து காட்டப்பட்டது. மேலும், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவா்களை மீட்கும் வழிமுறைகள் செயல்முறையுடன் விளக்கப்பட்டது. மாணவா்கள் ஆா்வத்துடன் சந்தேகங்களை கேட்டறிந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT