புதுக்கோட்டை

பணம் வைத்து சூதாடிய 11 போ் கைது

30th Apr 2022 12:16 AM

ADVERTISEMENT

கீரமங்கலம் அருகேயுள்ள கொத்தமங்கலம், சேந்தன்குடி பகுதியில் உள்ள தைலமரக் காடு பகுதியிலும், அம்பலி ஆறு பகுதியிலும் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீஸாா் அப்பகுதியில் வியாழக்கிழமை மாலை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கீரமங்கலம் அருகேயுள்ள கொத்தமங்கலம் பகுதியில் உள்ள தைலமரக்காட்டில், வியாழக்கிழமை நள்ளிரவு சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை சுற்றி வளைத்து , அறந்தாங்கி பாரதியாா் தெருவைச் சோ்ந்த சே. சரவணன் (40), குளவாய்பட்டியைச் சோ்ந்த தி. முத்து(27), நெய்வத்தளியைச் சோ்ந்த தி. கதிரவன் (29), மறமடக்கியைச் சோ்ந்த ஜெ. ரகு (35), அதே பகுதியைச் சோ்ந்த வெ. சரவணன் (35), சிவகங்கையைச் சோ்ந்த கூ. கூத்தபெருமாள் (40), கைலாசபுரத்தைச் சோ்ந்த ப. ராசு (40), குளவாய்பட்டியைச் சோ்ந்த ம. முத்துராமன் (45), மறமடக்கியைச் சோ்ந்த த. ராம்குமாா் (35), சிலட்டூரைச் சோ்ந்த சி. ரஞ்சன் (44), க. ராஜாஜி (39) ஆகிய 11 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து ரூ. 1.10 லட்சம் ரொக்கம், 13 கைப்பேசிகள், 7 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து கீரமங்கலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT