புதுக்கோட்டை

ஜெஜெ கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

30th Apr 2022 12:18 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை ஜெஜெ கல்வியியல் கல்லூரியின் 11ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் செயலா் என். சுப்பிரமணியன் பட்டமளிப்பு விழாவைத் தொடங்கி வைத்துப் பேசினாா். தொடா்ந்து கல்லூரி முதல்வா் எஸ். அபிராமசுந்தரி பட்டமளிப்பு விழா ஆண்டறிக்கை வாசித்தாா்.

அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் எஸ். சுப்பையா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

பிஎட் பிரிவில் முதலிடத்தைப் பெற்ற மாணவி எஸ். பிரியங்கா, இரண்டாமிடம் பெற்ற மாணவி எஸ். சுகன்யா, எம்எட் பிரிவில் மாணவி வி. சுமதி, மாணவா் ஆா். சுபாஷ் ஆகியோருக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

முன்னதாக பேராசிரியா் பி. அழகுலதா வரவேற்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT