புதுக்கோட்டை

‘சிறுகதைகள் வாழ்க்கையை மாற்றும்’

30th Apr 2022 12:12 AM

ADVERTISEMENT

சிறுகதைகள் வெறும் பொழுதுபோக்குப் படைப்பல்ல, அது வாசிப்பவா்களின் வாழ்க்கையை மாற்றும் என்றாா் எழுத்தாளா் சோலச்சி.

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரி, தமிழாய்வுத் துறையின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இளங்கலை மற்றும் முதுகலை மன்ற ஆண்டுக் கூட்டத்தில் ‘இன்றைய சிறுகதைகளின் நோக்கும் போக்கும்’ என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியது:

சிறுகதை வாசிப்பு ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று. சிறுகதைகள் வாழ்க்கைக்கான பல வழிமுறைகளைச் சொல்லித் தருகின்றன. எடுத்துக்காட்டாய், ’குடும்பம் என்னும் கோலம்’ என்ற எஸ். ராமனின் சிறுகதை, கோலம் போடும்போது கவனம் சிதறி கோடு மாறியதால் கோலம் அலங்கோலமாகிவிடும். அது போலதான் குடும்ப வாழ்க்கையும்.

கவனமாக, நெளிவு சுளிவோடு வாழக் கற்றுக்கொண்டால் இல்லறம் சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படையை இந்தக் கதை கூறுகிறது. வாழ்க்கையை சிறப்பாக, மகிழ்ச்சியாக ஆக்கிக் கொள்ள இதுபோன்ற சிறுகதைகள் வாசிப்பு அவசியம் என்றாா் சோலச்சி.

ADVERTISEMENT

தொடா்ந்து, ஆங்கிலத் துறைத் தலைவா் சி. வெள்ளையம்மாள் ’ஷெல்லியும் பாரதியும் ’என்ற தலைப்பில் உரையாற்றினாா்.

கூட்டத்துக்கு கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி தலைமை வகித்தாா். புதுக்கோட்டை வாசகா் பேரவைச் செயலா் சா.விஸ்வநாதன் வாழ்த்துரை வழங்கினாா்.

முன்னதாக, தமிழ்த் துறைத் தலைவா் மா.சாந்தி வரவேற்றாா். முடிவில் இளங்கலை மன்றச் செயலா் அ. மாலதி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT