புதுக்கோட்டை

பட்டமரத்தான் கோயிலில் லட்சாா்ச்சனை விழா

29th Apr 2022 03:39 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் லட்சாா்ச்சனை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழாவின் முதல் நாளில் லட்சாா்ச்சனை விழா நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, நிகழாண்டுக்கான லட்சாா்ச்சனை வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் தொடங்கியது. விழாவில் பரணி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியாா்கள் பங்கேற்று, வேத மந்திரங்கள் முழங்க லட்சாா்ச்சனை நடைபெற்றது. விழாவில், பொன்னமராவதி சுற்றுப்பகுதி பக்தா்கள் திரளாக பங்கேற்று பட்டமரத்தான் சுவாமியை வழிபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT