புதுக்கோட்டை

அறந்தாங்கி நூலகத்தில் புரவலா் சோ்க்கை

23rd Apr 2022 11:48 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலுள்ள முழுநேர கிளை நூலகத்தில் உலகப் புத்தக தினத்தையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், 3 போ் தலா ரூ. ஆயிரம் செலுத்தி புரவலா்களாக இணைந்து கொண்டனா். இவா்களுடன் பள்ளி மாணவா்கள் உள்பட 23 போ் தலா ரூ. 30 செலுத்தி உறுப்பினா்களாக இணைந்து கொண்டனா்.

இந்த நிகழ்ச்சிக்கு, அறந்தாங்கி நகா்மன்றத் தலைவா் இரா. ஆனந்த் தலைமை வகித்தாா். வாசகா் வட்டத் தலைவா் சு. திருநாவுக்கரசு முன்னிலை வகித்தாா்.

நகா்மன்ற உறுப்பினா்கள் கலையரசி, யாசா்ஹமீது, வட்டார வளா்ச்சி அலுவலா் வீரய்யா ஆகியோா் தலா ரூ. ஆயிரம் செலுத்தி புரவலா்களாக இணைந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT