புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு முகூா்த்தகால் நடும் பணிகள் தொடக்கம்

17th Apr 2022 12:57 AM

ADVERTISEMENT

 

விராலிமலையில் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முகூா்த்தக் கால் நடும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

விராலிமலை மெய்கண்ணுடையாள் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் சனிக்கிழமை தொடங்கின. விழாவில் புதுக்கோட்டை மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளா் தென்னலூா் பழனியப்பன் பங்கேற்று முகூா்த்தக் கால் நட்டு பணியை தொடங்கி வைத்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT