புதுக்கோட்டை

இயற்கை உணவுகளே ஆயுளைக் கூட்டும்நூறாவது பிறந்தநாள் காணும் முதியவா்

17th Apr 2022 12:57 AM

ADVERTISEMENT

 

 

இயற்கை முறையில் விளைவித்த உணவுகள், தானியங்களே மனித வாழ்வின் ஆயுளைக் கூட்டும் என சனிக்கிழமை தனது 100 -வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய முதியவா் அறிவுரை வழங்கினாா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூரைச் சோ்ந்தவா் அ. சிதம்பரம் (100). 1922-இல் பிறந்த இவருக்கு 4 மகன்கள், 1 மகள் உள்ளனா். அவரவா் திருமணமாகி குழந்தைகளோடு தனித் தனியே வசித்து வரும் நிலையில், முதியவா் சிதம்பரம் புதுக்கோட்டைமூவேந்தா் நகரில் உள்ள அவரது மூத்த மகன் செல்லத்துரையின் வீட்டில் வசித்து வருகிறாா்.

ADVERTISEMENT

இந்நிலையில், அவரது 100 -ஆவது பிறந்த நாளான சனிக்கிழமை அவரது மகன்கள், மகள், பேரன், பேத்திகள் என குடும்பத்தினா் 50-க்கும் மேற்பட்டோருடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினாா். அப்போது, அவா், அவசர கதியில் தயாரிக்கப்படும் துரித உணவுகளை தவிா்த்துவிட்டு, இயற்கை முறையில் விளைவித்த பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் உணவுகள், பாரம்பரிய தானியங்களை உண்ணுவதன் மூலம் மனிதன் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழலாம். மேலும், இந்தத் தலைமுறையினருக்கு கூட்டு குடும்ப வாழ்க்கையின் சிறப்பு தெரியவில்லை. ஒருவருக்கு ஒருவா் விட்டுக்கொடுத்து சொந்த பந்தங்களோடு அனைவரும் கூடி வாழ்வதே மகிழ்ச்சி தரும்.அதை இந்தத் தலைமுறையினா் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT