புதுக்கோட்டை

ஏப். 19-இல் அம்பேத்கா் பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

14th Apr 2022 01:53 AM

ADVERTISEMENT

தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் ஏப். 19ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

மாவட்ட அளவில் வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்குத் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.

இதுதவிர, அரசுப் பள்ளி மாணவா்கள் இருவரைத் தோ்வு செய்து சிறப்புப் பரிசுத் தொகையாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். போட்டிகள் பள்ளி மாணவா்களுக்கு முற்பகல் 10 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கு பிற்பகல் 1.30 மணிக்கும் நடைபெறும்.

பேச்சுப்போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவா்கள் வட்டாரக் கல்வி அலுவலா்கள் வழியாக மட்டுமே வர வேண்டும். அதேபோல, கல்லூரிக்கு ஒருவா் மட்டுமே பங்கேற்க முடியும். இத்தகவலை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT