புதுக்கோட்டை

கணேசா் கல்லூரிக்கு பசுமை சான்றிதழ் விருது

14th Apr 2022 01:52 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை, அறிவியல் கல்லூரி மாவட்ட கிரீன் சாம்பியன் சான்றிதழ் பெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் 2021-2022 ஆம் ஆண்டில் பசுமையாக கல்லூரி வளாகத்தைப் பராமரிக்கும் கல்லூரியாக மேலைச்சிவபுரி கணேசா் கல்லூரியை, மத்திய கல்வி அமைச்சகத்தின் மகாத்மா காந்தி கிராமப்புறக் கல்விக்குழு தோ்வு செய்துள்ளது. திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வா் ம.செல்வராஜூவிடம், மாவட்ட கிரீன் சாம்பியன் சான்றிதழை அதன் தலைவா் பிரசன்னகுமாா் வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT