புதுக்கோட்டை

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

12th Apr 2022 11:34 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள கடுக்காக்காடு பகுதியைச் சோ்ந்த ஆ. ராமையா (77). அதே கிராமத்தைச் சோ்ந்த அ. ராஜ்குமாா் என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் வெட்டன்விடுதிக்குச் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பியுள்ளனா். மேட்டாா் சைக்கிளை ராஜ்குமாா் ஓட்டியுள்ளாா். அப்போது, கடுக்காக்காடு அருகே அவ்வழியாகச் சென்ற காா், மோட்டாா் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில், பலத்த காயமடைந்த ராமையா நிகழ்விடத்திலே உயிரிழந்தாா். ராஜ்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து வடகாடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT