புதுக்கோட்டை

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை

12th Apr 2022 11:37 PM

ADVERTISEMENT

குடும்பத் தகராறில் உறவினரை கழுத்தை நெறித்துக் கொன்றவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உள்ள ஆனைவாரியைச் சோ்ந்தவா் முத்து (56). இவா், கடந்த 2020 நவம்பா் 11ஆம் தேதி இவரது உறவினா் வீரய்யா (48) என்பவரை வெள்ளாற்றங்கரையில் வைத்து கழுத்தை நெறித்துக் கொன்றாா். இதுகுறித்து கே. புதுப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துவைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில், அரசு வழக்குரைஞா் பா. வெங்கடேசன் ஆஜராகி வாதாடினாா். வழக்கு விசாரணையின் நிறைவில் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. அப்துல் காதா், குற்றவாளி முத்துவுக்கு செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் முத்துவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகை ரூ. 5 லட்சத்தை, முத்து சிறையில் மேற்கொள்ளும் பணிக்கு வழங்கப்படும் ஊதியத்தில் இருந்து 20 சதவிகிதத்தை மாதந்தோறும் எடுத்து, கொல்லப்பட்ட வீரய்யாவின் மனைவி புனிதாவின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT