பொன்னமராவதி அலுவலா் மனமகிழ் மன்ற புதிய நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
பொன்னமராவதி அலுவலா் மனமகிழ் மன்ற பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மன்றத்தின் தலைவா் அ.கருப்பையா தலைமை வகித்தாா். இணைச் செயலா் குருபெருமாள் ஆண்டறிக்கை வாசித்தாா். கூட்டத்தில் மன்றத்தின் சேவைத் திட்டங்கள் மற்றும் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், மன்றத்தின் நிகழாண்டு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். பொன்னமராவதி அலுவலா் மனமகிழ் மன்ற தலைவராக மருத்துவா் மு. சின்னப்பா, செயலராக மு. தியாகராஜன், பொருளாாக அ.ஹென்றி, துணைத்தலைவராக பி. தங்கராஜ் இணைச் செயலராக எஸ்என்,ராமநாதன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். தோ்தல் அலுவலராக எஸ். அழகப்பன் செயல்பட்டாா். நிா்வாகிகள் வீ. மனோகரன், பா. ராமகிருஷ்ணன், பி. சுப்பிரமணியன், க. மணிகண்டன், ஆா். குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.