புதுக்கோட்டை இன்னா்வீல் சங்கத்தின் மகளிருக்கான நட்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் தலைவா் சுசீத்ராள் பெருமாள் தலைமை வகித்தாா். பொருளாளா் சுசன் வில்சன் வரவேற்றாா். புதுக்கோட்டை நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் லில்லி கிரேஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நடனாலயா பள்ளி மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில், ஸ்ரீ சாய் சற்குரு நடனாலயா பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம் நடைபெற்றது. நிறைவில் நித்யா லெட்சுமி நன்றி கூறினாா்.