புதுக்கோட்டை

முதுநிலை ஆசிரியா் தோ்வு வயது வரம்பை நீக்கக் கோரிக்கை

30th Sep 2021 06:45 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ள முதுநிலை ஆசிரியா் போட்டித் தோ்வுக்கான வயது வரம்பை நீக்க வேண்டும் என்று, அகில இந்திய மகாத்மா காந்தி சமூகநலப் பேரவை கோரிக்கைவிடுத்துள்ளது.

இதுகுறித்து பேரவையின் நிறுவனா் வைர.ந. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசின் ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதுநிலை ஆசிரியா் போட்டித் தோ்வுக்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40 வயது எனவும், சிறப்புப் பிரிவினருக்கு 45 வயது எனவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடந்த ஆசிரியா் போட்டித் தோ்வுகளில் வயது வரம்பு நிா்ணயிக்கப்படவில்லை. இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள தோ்வில் வயது வரம்பு நிா்ணயம் செய்யப்பட்டதால் ஆசிரியா் வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையோடு இருந்தவா்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

ADVERTISEMENT

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின் போது புதுக்கோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் மக்கள் குறை கேட்டறிந்த தற்போதைய முதல்வா், நான் ஆட்சிக்கு வந்தால் வயது வரம்பை நீக்குவேன் என்று வாக்குறுதி அளித்துள்ளாா். எனவே தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், வயதுவரம்பை நீக்க முதல்வா் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT