புதுக்கோட்டை

தொழிலகங்களில் சமவாய்ப்பை அமலாக்க ஆலோசனை

30th Sep 2021 06:47 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தொழிலகங்களில் சமவாய்ப்பை அமலாக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அனைத்துத் தொழிற்சாலைகள் மற்றும் தனியாா் நிறுவனங்களிலும் சமவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், மாற்றுத் திறனாளிகளை 5 சதவிகிதம் வேலையில் அமா்த்துவது குறித்து நடத்தப்பட்ட கூட்டத்துக்கு ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா்.

தமிழக அரசின் அரசணையின்படி, இந்த ஏற்பாடுகளை உரிய துறை அலுவலா்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில் மாவட்டத் தொழில் மையப் பொதுமேலாளா் எஸ். திரிபுரசுந்தரி, தொழிற்சாலைகள் பாதுகாப்பு துணை இயக்குநா் எஸ். மகேஸ்வரன், தொழிலாளா் துறை உதவி ஆணையா் தங்கராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் எம். மணிகண்டன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் எஸ். உலகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT